தளபதி 66 படத்தில் இணைந்து இருக்கும் மாஸ்சான இசையமைப்பாளர்!
Official Music Director Thaman Join With Thalapathy 66
தளபதி 66 படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு இருந்த வேளையில் படக்குழு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இணையும் தளபதி 66 படத்திற்கு ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் சிந்தித்து கொண்டு இருந்த வேளையில் இசையமைப்பாளர் தமன் தற்போது இணைக்கப்பட்டு இருக்கிறார்.
“ ஒரே நாளில் இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானதால் ரசிகர்கள் அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர் “