லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவாக இருக்கும் தளபதி 67!
Thalapathy 67 Is Also Under LCU
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்கள் தற்போது ‘வாரிசு’ எனப்படும் திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் தளபதி 67 குறித்த ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அதாவது ஏற்கனவே விக்ரம் திரைப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவானது போல தளபதி 67 திரைப்படமும் LCU -வின் கீழ் வர இருக்கிறதாம்.
“ இந்த தகவல் கேட்டு குஷியான தளபதி ரசிகர்கள் இப்போதே தளபது 67 அப்டேட்டை கேக்க ஆரம்பித்து விட்டனர் “