தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகனின் லுக்கை வெளியிட்டது படக்குழு!
Thangalaan Team Wishing To Malavika Mohanan Idamporul
நடிகை மாளவிகா மோகனன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தங்கலான் திரைப்படத்தில் அவரின் லுக்கை ரிவீல் செய்து இருக்கிறது படக்குழு.
இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சீயான் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வருகிறது தங்கலான் திரைப்படம். இன்று மாளவிகா மோகனனின் பிறந்த நாள் என்பதால் படத்தில் அவரது லுக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறது தங்கலான் படக்குழு.
ஒரு மாடலாக மாளவிகா மோகனன் ரசிகர்களை ஈர்த்து இருந்தாலும் கூட, நடிப்பில் அந்த அளவுக்கு அவர் எந்த தமிழ் படத்திலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. விஜய், ரஜினி என்று பெரிய ஹீரோக்களுடன் நடித்து இருந்தாலும் கூட பெரிய அளவிற்கு அவருக்கு நடிக்கும் ஸ்பேஸ் அந்த படங்களில் இல்லை என்றும் கூறலாம்.
“ நிச்சயம் அவருக்கும் ’தங்கலான்’ நடிப்பு தீனி போடும் என்று கூறிக் கொண்டு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறோம் “