வெளியானது நடிகர் ஜெயம் ரவியின் தனி ஒருவன் இரண்டாம் பாகம் அப்டேட்!

Thani Oruvan 2 Update Is Out Idamporul

Thani Oruvan 2 Update Is Out Idamporul

நடிகர் ஜெயம் ரவி அவர்களின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மோகன் ராஜா அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. படத்தின் ஷூட் 2024-யில் துவங்கும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.

மிக நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த ஒரு இரண்டாம் பாகம், மித்ரனை ஜெயம் ரவி நிரப்பி விடுவார், சித்தார் அபிமன்யூ முதல் பாகத்திலேயே இறந்ததாக காண்பிப்பார்கள். அவருடைய இடத்தில் வரும் இன்னொரு வில்லன் என்றால் அதை எப்படி மோகன் ராஜா நிரப்புவார் என்பது நிச்சயம் சவாலான ஒன்று தான்.

“ படத்தில் நயன்தாராவும் இருக்கிறார். முதல் பாகத்திற்கு ஹிப் ஹாப் தமிழாவின் இசை மிகுந்த பலம், ஆனால் இரண்டாம் பாகத்திற்கு சாம் சி எஸ்சை இசையமைப்பாளராக நியமித்து இருக்கிறது படக்குழு, அவர் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author