நடிகர் தனுஷ் அவர்களின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
Thiruchitrambalam Release Date Is Out
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ், பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ சில நேரங்களில் எந்த வித ஹைப்பும் இல்லாமல் சில படங்கள் வெற்றி பெற்று விடும். அந்த வகையில் இந்த படத்திற்கு பெரிதாய் எதிர்பார்ப்புகள் இல்லை. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் “