வெளிநாடுகளில் ’வாரிசு’ திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்கள் ஆயிரக்கணக்கில் கேன்சல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் படக்குழு ‘வாரிசு’ திரைப்படத்தை ஜனவரி 12 அன்றே வெளியிட திட்டமிட்டு இருந்தது. இதனால் ஓவர்சீஸ்களில் ஜனவரி 12-க்கான டிக்கெட்டுக்கள் ஒபன் ஆனதுமே விற்று தீர்ந்தது. தற்போது படக்குழு வாரிசு வெளியீட்டை ஜனவரி 11-க்கு மாற்றி இருப்பதால் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுக்கள் கேன்சல் செய்யப்பட்டு இருக்கிறது.
“ முதல் நாள் முதல் ஷோ என்ற ஏக்கத்தில் புக் செய்தவர்கள் எல்லாம் தங்களது டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதை உணர்ந்ததும், போங்கடா அப்படி ஒரு படமே தேவையில்ல எங்களுக்கு என்ற நிலைக்கு வந்து விட்டனர் “