’துணிவு’ திரைப்படத்தில் அண்ணன் ஜி.பி.முத்து இருக்கிறாரா?
GP Muthu Included In Thunivu Cast
அஜித் குமார் – ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தில் அண்ணன் ஜி.பி. முத்து அவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பொங்கலுக்கு வெளியாக காத்து இருக்கும் துணிவு திரைப்படம் குறித்து பெரிதாக எந்த தகவலும் கசியசில்லை, ஆனால் தற்போது ஜி.பி. முத்து மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோரெல்லாம் துணிவு திரைப்படத்தில் துணை நடிகர்களாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்த செய்தியின் உண்மை தன்மை தெரியாவிட்டாலும், இந்த செய்தியை கேட்டதும் தல ரசிகர்கள் சற்றே பீதியில் இருக்கின்றனர். பாங்க் ராபரி, முழுக்க முழுக்க வில்லனிசம் என்ற படத்திற்கு எதற்கு இவர்களெல்லாம் என்ற கேள்வி நமக்கே எழுகிறது “