என்னது ’துணிவு’ குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமா?
Thunivu Ajith Kumar Hd Wallpaper Idamporul
’துணிவு’ திரைப்படம் குறித்து படத்தின் சக நடிகர் சமுத்திரக்கனி, ‘இது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்’ என கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் என்றாலே தற்போதெல்லாம் ரசிகர்கள் பீதியில் தான் தியேட்டர்களை அணுகுகின்றனர். அந்த வகையில் துணிவு திரைப்படமும் அந்த ரகம் தான் என சகநடிகர் சமுத்திரக்கனி கூறி இருப்பது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது, அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
“ ஆக மொத்தம் இந்த வருடம் கோலிவுட்டில் இரண்டு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் நேருக்கு நேர் மோத இருக்கிறது போல “