அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ’துணிவு’ திரைப்படத்தின் ஸ்பெசல் அப்டேட்!
Thunivu Overseas Rights Packed By Famous Production Company
நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் ஸ்பெசல் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இணைவில் உருவாகும் மூன்றாவது திரைப்படமான ‘துணிவு’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம். படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் இனி தினமும் அப்டேட் மழை தான் என்று கூறப்பட்டு வருகிறது.
“ என்றாவது ஒரு அப்டேட் என்றாலே இணையம் களைகட்டும். தினம் தினம் அப்டேட் என்றால் இணையம் அதிர்ந்து நின்றாலும் சொல்வதிற்கில்லை ”