எதிர்பார்ப்பை கணிப்பதற்காக ’துணிவு’ படக்குழுவே துணிவு பாடல்களை லீக் செய்ததா?
Thunivu Song Leaked Purposefully
’துணிவு’ படக்குழுவே துணிவு திரைப்படத்தின் பாடல்களை லீக் செய்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் கிளம்பி வருகிறது.
இப்போதெல்லாம் ஒரு படத்தின் புரொமோசனுக்காக படக்குழுக்களே ஒரு சில லீக்குகளை செய்கின்றனர். அந்த வகையில் ‘துணிவு’ படக்குழுவினரே துணிவு திரைப்படத்தின் ஒரு சில கட் பாடல்களை லீக் செய்து எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை நோட்டம் இடுவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
“ யார் லீக் செய்தார்களோ தெரியவில்லை, ஆனால் தற்போதெல்லாம் புரோமோசன்களுக்காக சர்ச்சைகள், லீக்குகளை படக்குழுவினரே கிளப்பிவிட்டு படக்குழுவினரே அதில் ஆதாயமும் தேடிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது “