துணிவு VS வாரிசு கிளாஷ், எந்த திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் பந்தயம் அடிக்கும்?
பொங்கல் வெளியீடாக இரண்டு முக்கிய திரைப்படங்களின் வாயிலாக இரண்டு முக்கிய ஹீரோக்கள் மோத இருப்பதால் கோலிவுட் களம் சற்றே பையராக தான் இருக்கிறது.
வாரிசு முழுக்க முழுக்க ஒரு பேமிலி ட்ராமா, துணிவு அதற்கு அப்பாற்பட்ட களம், ஒரு வேளை வலிமையில் தேவையில்லாமல் புகுத்திய பேமிலி ட்ராமாக்கள் போல துணிவிலும் டைரக்டர் புகுத்தி இருந்தால் நிச்சயம் அது வாரிசுக்கு சாதகமாகவே அமையும். ஒரு வேளை துணிவு துணிவாகவே மட்டும் நின்றால் அது வாரிசுக்கு பாதிப்பு.
“ ட்ரெயிலரிலேயே ஓவர் ஹைப் கொடுத்து இருக்கிறது துணிவு, வாரிசு ட்ரெயிலர் மூலம் ஒரு பேமிலி ட்ராமா போல காண்பித்து லெஸ் ஹைப் தான் கொடுத்து இருக்கிறது. அதனால் துணிவு கொஞ்சம் மிஸ் ஆனாலும் அது நிச்சயம் வாரிசு பொங்கலாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை “