தளபதி 68 திரைப்படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த்?
Prashanth In Thalapathy 68 Film Fact Here Idamporul
தளபதி 68 திரைப்படத்தின் ஷீட்டிங் வெகுவிரைவில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் இணையும் தளபதி 68 திரைப்படத்தின் ஷீட்டிங் வெகுவிரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் முக்கிய ரோலில் டாப் ஸ்டார் பிரஷாந்த், கோகிலா மோகன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கதாநாயகிக்கு மீனாக்ஷி ஷவுத்ரி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறதாம்.
“ இன்னும் படத்தில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறதாம், ஒவ்வொரு கேரக்டருக்கும் சமீபத்திய புதுமுகங்களை தேர்ந்து எடுக்காமல், 90’ஸ் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களிடம் படக்குழு பேசி வருகிறதாம் “