புதிய திரைப்படம் ஒன்றில் நடிகராக அறிமுகம் ஆகும் பைக் ரேசர் TTF வாசன்!
TTF Vasan Becoming Actor In New Film Idamporul
புதிய திரைப்படம் ஒன்றில் பிரபல பைக் ரேசர் TTF வாசன், நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல பைக் ரேசர் மற்றும் யூடியூபரான TTF வாசன் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பிறந்தநாளன்று படக்குழு பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். வெகு விரைவில் டீசரை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ சினிமாவிற்குள் நுழைவதற்கு தற்போது யூடியூப் என்பது ஒரு சிறந்த பிளாட்பார்மாக இருந்து வருகிறது, அந்த வகையில் வந்திருக்கும் வாசனும் ஜொலிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “