தன்னுடைய படங்களை ஜாலியாக தானே கலாய்த்து வரும் உதயநிதி!
Udhayanidhi Stalin Recent Interview
உதயநிதி அவர்கள் தொடர்ந்து பல கலகலப்பான இண்டர்வியூக்களை கொடுத்து வருகிறார். அதில் தான் வெளியிட்ட படங்களையும் ஜாலியாக கலாய்த்து வருகிறார்.
உதயநிதி அவர்களின் இண்டர்வியூக்கள் தற்போது ஒரு வாரங்களாக இணையத்தில் ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. தான் வெளியிட்ட படத்தை தானே தனது இன்டர்வியூக்களில் ஜாலியாக கலாய்த்து வருகிறார். இதில் டான், கேப்டன் உள்ளிட்ட படங்களும் அடங்கும். இது ஒரு பக்கம் ஜாலியாக போய் சேர்ந்தாலும் எதிர் தரப்பில் கொழுந்து விட்டு எரியவும் செய்கிறது.
“ ஒரு பக்கம் அவரே வெளியிடுகிறார் அவரே கலாய்க்கிறார் என்று ஜாலியாக எடுத்து கொண்டாலும் அதில் பலரது உழைப்பு கிண்டல் அடிக்கப்படுகிறது என்றும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர் “