’மாஸ்டர்’ திரைப்படத்தின் மொத்த வசூலையும் முறியடித்தது ‘வலிமை’ முன்பதிவு வசூல்!
Valimai Official HD Stills
பிரான்ஸ் நாட்டில் மாஸ்டர் திரைப்படத்தின் மொத்த வசூலையும் முறியடித்து இருக்கிறது வலிமை திரைப்படத்தின் முன்பதிவு வசூல்.
இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படம் வெளியீட்டிற்கு முன்னே பிரான்ஸ் நாட்டில், ’மாஸ்டர்’ வசூலை முந்தி இருக்கிறது ’வலிமை’ படத்தின் முன்பதிவு வசூல்.
“ ஒரு திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னே வசூலை அள்ளுவது இதுவே முதன்முறையென விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர் “