’வலிமை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Valimai Official Releasing Date Announced 02 02 2022
நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி, யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான ‘வலிமை’ பிப்ரவரி 24-இல் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
“ அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய தவமாக கருதப்பட்ட ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது இணையத்தையே அதிர வைத்து இருக்கிறது. இன்று எல்லா இடங்களிலும் ‘வலிமை’ தான் ட்ரென்டிங் “