வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஒரு டிக்கெட் விலை 2000 ரூபாயா?
Varisu Audio Launch Ticket Sale For Much Prizes
நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஒரு டிக்கெட் விலை 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணையும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24 அன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவின் டிக்கெட்டுக்களை ஒரு சிலர் 2000 மற்றும் அதற்கு அதிகமான விலைக்கு விற்பதாக தகவல் வெளியாகவே ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
“ நடிகர் விஜய் தரப்பில் டிக்கெட் இலவசம் என்று சொல்லப்பட்டாலும், டிக்கெட்டுக்கள் விலைக்கே விற்கப்படுகின்றன. அப்படியென்றால் இந்த பணம் யாரை சென்றடைகிறது என்பது மர்மமாகவே இருக்கிறது “