அப்டேட் கேட்டு வெங்கட் பிரபுவை திட்டி தீர்த்த விஜய் ரசிகர்கள், நொந்து போய் அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு!
Fan Scolding Venkat Prabhu For Update Venkat Cool Answer Idamporul
நடிகர் விஜய் – வெங்கட் பிரபு இணைவில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வெங்கட் பிரபுவை கடுமையாக சாடியதும், அதற்கு அவர் நொந்து போய் பதில் அளித்த நிகழ்வு ஒன்றும் எக்ஸ் வலைதளத்தில் அரங்கேறி இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சிலர் ’தி கோட்’ திரைப்படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில், இயக்குநர் வெங்கட் பிரபுவை கடுமையாக வசைபாட, வெங்கட் பிரபுவோ அதற்கு நொந்து போய் ‘இப்ப தான் கொடுக்கலான்னு நினைச்சேன், ஆனா இப்படி பண்றீங்களே’ என பதில் அளித்து இருக்கிறார்.
” சமீப காலமாகவே கோலிவுட் ரசிகர்களின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் தரம் குறைந்ததாகவே இருந்து வருகிறது. ஒன்று ரசிகர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை திருத்த வேண்டும், அப்போது தான் ஒரு ஆரோக்கியமான சூழல் கோலிவுட்டில் இருக்கும் “