அக்டோபரில் ஆரம்பமாகும் விடா முயற்சி ஷூட்டிங்?
Vidaamuyarchi Shoot Starts In October 23 Fact Here Idamporul
நடிகர் அஜித்குமார் அவர்களின் விடாமுயற்சி ஷூட்டிங் அக்டோபரில் ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இணையும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் துவங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 திரைப்படமும் அக்டோபரில் துவங்க இருப்பதால் இரண்டு படங்களின் வெளியீடும் நிச்சயம் கிளாஷ் ஆக வாய்ப்பு இருக்கிறது.
துணிவு, வாரிசு இரண்டும் ஒரே சமயத்தில் வெளியான திரைப்படங்கள். ஆனால் அதற்கு பின் நடிகர் விஜய் அடுத்து ஒரு படத்தையும் முடித்து விட்டு, வெங்கட் பிரபு படத்தையும் துவங்கி விட்டார். ஆனால் நடிகர் அஜித் தற்போது தான் தனது படத்தின் ஷூட்டிங்கையே துவங்க இருக்கிறார் என அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
“ கதையை பலப்படுத்தவே மகிழ் திருமேனி அவர்களுக்கு நடிகர் அஜித் அவர்கள் இவ்வளவு காலம் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். என்ன எதுவோ ரசிகர்களின் காத்திருப்பிற்கு இந்த கூட்டணியில் ஒரு நல்ல படம் வந்தால் திருப்தி அவ்வளவு தான் “