லைகர் மோசமான படம் தான், ஆனால் விஜய் தேவர்கொண்டாவை கடுமையாக சாடுவது முறையல்ல!
Liger Vijay Devarkonda
லைகர் மோசமான படமாகவே இருக்கட்டும், ஆனால் விஜய் தேவர்கொண்டாவை இந்த அளவுக்கு சாடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவே இருக்கிறது.
லைகர் திரைப்படம் முழுக்க முழுக்க எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய் தேவர்கொண்டாவை பலரும் கடுமையான முறையில் சாடி வருகின்றனர். படத்தில் அவரின் உழைப்பு தெரிகிறது. அவர் கடுமையாகவே உழைத்து இருக்கிறார். இயக்குநர் தான் கதை, நடிகை, துணை நடிகைகள் தேர்வு என்று ஒவ்வொன்றிலும் சொதப்பி இருக்கிறார். ஆதலால் நடிகரை சாடுவது முறையாகாது.
“ அடுத்தடுத்த படங்களில் தேவர்கொண்டா மீண்டு வருவார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை , பூரி ஜெகன்னாத் தனது அடுத்த படமான ’ஜன கண மண’ திரைப்படத்திலாவது தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோள் “