’இயக்குநர் வெற்றி மாறன், லோகேஷ், பா ரஞ்சித் அவர்களுடன் இணைய ஆசை’ – விஜய் தேவர்கொண்டா
Vijay Devarkonda Wants To Work With Tamil Directors
சென்னையில் ’லிகர்’ திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவர்கொண்டா ருசிகரமான பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
புரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ திரைப்படம் வரும் 25 ஆகஸ்ட் அன்று வெளியாக இருக்கும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில், ‘தமிழ் இயக்குநர்களுடன் இணைய ஆசை இருக்கிறது, முக்கியமாக லோகேஷ், வெற்றிமாறன், பா ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என தெரிவித்து இருக்கிறார்.
“ குத்துச்சண்டை வீரனாக விஜய் தேவர்கொண்டா நடிக்கும் லிகர் திரைப்படத்தில், உலகளாவிய குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்து இருக்கிறார் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது “