விஜய் சேதுபதி – காத்ரினா கைஃப் இணையும் மெரி கிறிஸ்துமஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Vijay Sethupathi In Merry Christmas Release Date Out Idamporul
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் இணையும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீ ராம் ராகவன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, காத்ரினா கைஃப், ராதிகா ஆஃப்தே, டின்னு ஆனந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் படங்களை கையில் வைத்து இருக்கும் விஜய் சேதுபதி, கோலிவுட்டை போல பாலிவுட்டிலும் ஜொலிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “