ஜவானில் விஜய் சேதுபதியின் மிரட்டல் பயங்கரமாக இருக்கும் – எடிட்டர் ரூபன்
Jawan Vijay Sethupathy Will Be A Mass Pure Villain In Whole Film Says Rooban Idamporul
ஜவான் திரைப்படத்தின் விஜய் சேதுபதியின் மிரட்டல் பயங்கரமாக இருக்கும் என படத்தின் எடிட்டர் ரூபர் கூறி இருக்கிறார்.
இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில், விஜய் சேதுபதி அவர்களின் வில்லத்தனம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பயத்தை நிச்சயம் மனதில் விதைக்கும் என படத்தின் எடிட்டர் ரூபன் கூறி இருக்கிறார்.
விஜய் சேதுபதி தற்போதெல்லாம் ஹீரோவாக நடிப்பதைக் காட்டிலும் வில்லனாகவே எல்லா படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். தர்மதுரை என்னும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி என்னும் மகா நடிகன் அசாத்தியமாக பல திறமைகளை காண்பித்து இருப்பான். தொடர்ந்து வில்லனிசம் காட்டுவதைக் காட்டிலும் அப்படியும் சில படங்களில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
“ நிச்சயம் எதிர்காலங்களில் விஜய் சேதுபதியை மீண்டும் தர்மாவாக பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது வில்லனிசத்தையும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர் விஜய் சேதுபதி ரசிகர்கள் “