பிரபல வலைதளத்தில் வெளியாக இருக்கும் கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படம்!
Vikram OTT Release Date Announced
நடிகர் கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் விக்ரம் திரைப்படம் பிரபல வலைதளத்தில் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அந்த எதிர்பார்ப்புகளை ஒட்டு மொத்தமாய் பூர்த்தி செய்தது மட்டும் அல்லாது வசூலிலும் 500 கோடியை நெருங்கி இருக்கிறது விக்ரம். இந்த நிலையில் படம் வருகின்ற ஜூலை 8 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஆரவாரமாக வந்து புஸ்வானமாய் போன திரைப்படங்களுக்கு மத்தியில், ஆரவாரமாய் வந்து இன்னமும் கூட ஆரவாரமாய் நிற்கிறது விக்ரம் என்று கூறினால் அது மிகையாகாது “