விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Vikram Prabhu In Taanaakkaaran Official Trailer Is Out
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கு ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் தமிழ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வலைதளத்தில் ஏப்ரல் 8 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ விக்ரம் பிரபு என்னும் ஒரு நல்ல கலைஞனுக்கு நல்ல கலைத்தீனீ இல்லை, இந்த படம் நிச்சயம் அவரின் நடிப்புக்கு சரிகட்டும் என்பது ட்ரெயிலரை பார்க்கும் போது புலப்படுகிறது. பார்க்கலாம் “