நடிகர் வினய் ராய், பிரபல நடிகையுடன் காதலா?
Actor Vinay Roy Love With Famous Actress Fact Here Idamporul
நடிகர் வினய் ராய் அவர்களும், பிரபல மலையாள நடிகை ஒருவரும் காதலித்து வருவதாக தகவல் கசிந்து வருகிறது.
நடிகர் வினய் ராய் பிரபல மலையாள நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் பொய், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த விமலா ராமனும், நடிகர் வினய் ராய்யும் தற்போதெல்லாம் பொது நிகச்சிகளில் ஒன்றாக தென்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையில் காதல் இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
“ விமலா ராமனும் தற்போது அவரது இன்ஸ்டா பக்கங்களில், தொடர்ந்து வினய் ராய் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதால் ஓரளவிற்கு இந்த காதல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது “