விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
விஷால் மற்றும் இயக்குநர் ஹரி அவர்கள் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் விஷால் அவர்களின் 34 ஆவது திரைப்படத்திற்கான படப்பிட்ப்பு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஷாலுக்கு தாமிரபரணி, பூஜை என்று இரண்டு மிகப்பெரிய ஹிட்களை கொடுத்த ஹரியுடன் 9 வருடங்களுக்கு பிறகு இணைந்து இருக்கிறார் விஷால்.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக கூடுதல் தகவல். படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் எனவும் வெகுவிரைவில் படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக கட்டவிழ்க்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்து இருக்கிறது.
“ தாமிரபரணி திரைப்படம் எல்லாம் விஷால் அவர்களுக்கு மிகப்பெரிய மைல் கல், அந்த வகையில் 9 வருடங்களுக்கு பிறகான இந்த இணைவும் நிச்சயம் விஷால் அவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “