நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Vishnu Vishal In Mohandas Movie Teaser Is Out
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விஷ்ணு விஷால் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முரளி கார்த்திக் அவர்களின் இயக்கத்தில், விஷ்ணு விஷால், இந்திரஜித் சுகுமாறன், ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ வித்தியாசமான கதைக்களங்களை தெரிவு செய்வதில் விஷ்ணு விஷால் எப்போதும் ஒரு படி மேல். இந்த டீசர் வென்று இருக்கிறது. திரைப்படமும் மக்களின் மனதை வெல்லும் என நம்புவோம் “