வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Kaathu Vaakkula Rendu Kaadhal Stills
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என்ற மூவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த முறை விக்னேஷ் சிவன் ஒரு முக்கோண காதலை கையில் எடுத்து இருக்கிறார். அந்த முக்கோண காதலில் முக்கிய கதா பாத்திரங்களாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா வருகின்றனர். முழுக்க முழுக்க சாஃப்ட் காமெடி காதல் திரைப்படம். ட்ரெயிலர் ப்ராமிஸ்சிங்காகவே இருக்கிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ ’நானும் ரவுடி தான்’ அளவிற்கு இருந்தால் கூட போதும் என்ற எதிர் பார்ப்பு மட்டுமே ரசிகர்களுக்கு, நிச்சயம் விக்கி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். நம்புவோம் “