மீண்டும் இணைகிறது ’ராட்சசன்’ திரைப்பட கூட்டணி!
VV 21 Ratchasan Team Is Back Idamporul
விஷ்ணு விஷால் – ராம்குமார் இணைவில் உருவாக இருக்கிறது புதிய திரைப்படம் ஒன்று.
விஷ்ணு விஷால் அவர்களின் 21 ஆவது திரைப்படத்திற்காக, ராட்சசன் திரைப்பட கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம்குமார் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார். முண்டாசுப்பட்டி, ராட்சசன் கூட்டணி என்பதால் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது.
“ மீண்டும் ஒரு திரில்லரை எதிர்பார்க்கலாம் என்றே அறியப்படுகிறது. ஆனால் என்ன ஜார்னல் என்பது சஸ்பென்சாம் “