’பீஸ்ட்’ கதை அமைப்பில் நடிகர் விஜய் அவர்களின் தலையீடு இருந்ததா?

Director Nelson DilipKumar

Director Nelson DilipKumar

இயக்குநர் நெல்சன் அவர்களின் ’பீஸ்ட்’ கதை அமைப்பில் நடிகர் விஜய் அவர்களின் தலையீடு அதிகமாக இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.

ஒரு இயக்குநரை சுதந்திரமாக பணிபுரியவிட்டால் மட்டுமே அவர்கள் அவர்களுக்கு புலப்படுவதை காட்சியமைக்க முடியும். ஆனால் இங்கு பெரும்பாலான இளம் இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் போது, அந்த நடிகர்கள் அந்த இயக்குநர்களின் கதையிலும் காட்சியமைக்கும் விதத்திலும் கை வைக்கிறார்கள். அதுவே பீஸ்ட் படத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

படம் வெற்றி பெற்றுவிட்டால் பரவாயில்லை, ஆனால் தோல்வியடைந்துவிட்டால் மொத்த பழியும் இயக்குநர்களை அல்லவா சேருகிறது. இயக்குநர் நெல்சன் அவர்களில் பீஸ்ட் திரைப்படத்திற்கும் இதே நிலை தான், அங்கு ஒரு இடத்தில் கூட யாரும் நடிகரை பழிக்கவில்லை. பெரும்பாலும் இயக்குநர் நெல்சன் அவரையே வஞ்சிக்கிறார்கள். ‘கிச்சானாலே இழிச்சவாயன் தானே என்ற டையலாக் தான் நியாபகம் வருகிறது.

” தமிழ் சினிமா நடிகர்களே, இயக்குநர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அவர்களின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு நீங்களே உங்கள் படத்தை இயக்குவதாய் இருந்தால், தனியே இயக்குநர்கள் எதற்கு? “

About Author