சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி ‘சித்தா’வை வாங்க மறுத்த தெலுங்கு விநியோகஸ்தர்கள்!
Who Will See Siddharth Movie Says Telugu Distributors Idamporul
நடிகர் சித்தார்த் அவர்களின் ’சித்தா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கையில், தெலுங்கு விநியோகஸ்தர்கள் சித்தார்த்தை தரக்குறைவாக பேசி ‘சித்தா’ திரைப்படத்தை வாங்க மறுத்ததாக தெரிகிறது.
தமிழ், கேரளா ஏன் கர்நாடகாவிலும் கூட நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தை பார்த்து விட்டு உடனே விநியோகஸ்தர்கள் வாங்கி விட்டார்களாம். ஆனால் ஒரு சில தெலுங்கு விநியோகஸ்தர்கள், சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ’சித்தா’ திரைப்படத்தை திரையிடவும் மறுத்தார்களாம்.
ஆனால் இன்று ‘சித்தா’ திரைப்படம் சந்திரமுகி 2, இறைவன் என்ற இரண்டு பெரிய படங்களுக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. நல்ல விமர்சனங்களையும் மக்களிடையே பெற்று வருவதால் தமிழகத்தில் ‘சித்தா’ திரைப்படத்திற்கான ஷோவும் உயர்ந்து இருக்கிறது.
“ தன் படத்தை வாங்க மறுத்தது மட்டுமல்லாமல் தன்னையும் தரக்குறைவாக பேசிய தெலுங்கு விநியோகஸ்தர்கள் குறித்த இந்த தகவலை சித்தார்த் ஒரு மேடையில் கண்கலங்க தெரிவித்து இருப்பது சினிமா வட்டாரத்திடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது “