நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ்சில் இருந்து நீக்கம், காரணம் என்ன?
Why Annapoorani Removed From Netflix Fact Here Idamporul
நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ்சில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக தகவல்கள் பரவிய நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தை தங்களது வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதற்கு பின்னர் மீண்டும் ஓடிடியில் சேர்க்கப்படும் என படக்குழு இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறது.
“ ஜெய், நயன்தாரா இடையே மாமிச உணவுகள் குறித்து பேசப்படும் போது வரும் வசனங்கள் மத ரீதியாகவும், ஒரு சிலரின் உணர்வுகள் புண்படும்படியும் இருப்பதால் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் கருத்து தெரிவித்து இருக்கிறது “