ஏன் இயக்குநர் நெல்சன் மீது இவ்வளவு வெறுப்புகள், அவர் அப்படி என்ன செய்து விட்டார்?
Why So Much Of Hate With Nelson Dilip Kumar Idamporul
இயக்குநர் நெல்சன் மீது பீஸ்ட் வெளியானதில் இருந்தே பலர் வெறுப்புகளை கட்டவிழ்த்து வருகின்றனர். அவர் அப்படி என்ன தான் செய்து விட்டார்.
யோசித்து பார்த்தால் ‘வாரிசு’ திரைப்படத்தை விட ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு ரசிகனாக கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கும். டெக்னிக்கலாகவும் படம் வலிமையாக தான் இருக்கும். ஆனாலும் நெல்சன் மீது ஏன் ரசிகர்களுக்கு இவ்வளவு வெறுப்புகள் என்பது தான் இன்னமும் புரியாத புதிர் ஆகவே இருக்கிறது.
படம் தான் வெறுப்பிற்கு காரணம் என்றால் சமீபத்திய விஜய் அவர்களின் படமான வாரிசை விட பீஸ்ட் பன்மடங்கு பெட்டரான படம் தான். அவர் கொடுத்த ஒரு சில நேர்காணல்கள் தான் காரணம் என்றால் அவருடைய குணமே ஜாலியாக பேசுவது தான். அவர் நேர்காணலில் பேசியதும் ஒரு வித ஜாலிக்காக இருக்கலாம்.
“ ஒட்டு மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் அவரை தாக்கியதெல்லாம் போதும், அவருடைய கடின உழைப்பு ஜெயிலர், நிச்சயம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள் இல்லையேல் கடந்து விடுங்கள் அவ்வளவு தான் “