ட்ரெயிலரை வெளியிட பயப்படும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படக்குழு!
Varisu Vijay HD Stills Idamporul
ஒரு பக்கம் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலருக்காக காத்து இருக்கும் போது, ட்ரெயிலரை வெளியிட படக்குழுவோ அஞ்சிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போதெல்லாம் ரசிகர்கள் ஒரு ட்ரெயிலரை வைத்தே படம் எப்படி இருக்கும் என நிர்ணயித்து விடுகின்றனர். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானால் படத்தின் மொத்த கதையும் கசிந்து விடுமோ, அதனால் படத்தின் வசூலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் படத்தின் ட்ரெயிலரை வெளியிட அஞ்சி நிற்கிறது வாரிசு படக்குழு.
“ தற்போதெல்லாம் அரைத்த மாவையே அரைத்து கொண்டு இருந்தால் ரசிகர்கள் வெறுத்து விடுகின்றனர். அந்த வகையில் வாரிசு திரைப்படமும் ஏற்கனவே ஒரு அரைத்த மாவு தானாம் ஆனால் அதை எந்த விதத்தில் புதிதாக செய்து இருக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் படத்தின் நிலைமை அமையும் “