தளபதி 69 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுவாரா ஆர் ஜே பாலாஜி?
Thalapathy 69 RJ Balaji Directing Thalapathy Vijay Fact Here Idamporul
தளபதி 69 திரைப்படத்திற்காக ஆர் ஜே பாலாஜி அவர்களிடம் நடிகர் விஜய் விரிவான கதை வடிவத்தை கேட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஆர் ஜே பாலாஜி ஒரு ஒன் லைனர் ஒன்றை தளபதி விஜய் அவர்களிடம் கூறினாராம். தற்போது அந்த ஒன்லைனரை விரிவுபடுத்த சொல்லி தளபதி விஜய் ஆர் ஜே பாலாஜியிடம் கூறி இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. இதனால் தளபதி 69 இயக்குநர்கள் போட்டியில் ஆர் ஜே பாலாஜியும் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறார்.
“ வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, லோகேஷ் மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்ட 5 இயக்குநர்கள் தற்போது நடிகர் விஜய் அவர்களின் கடைசி படத்தை இயக்குவதற்காக காத்திருப்பதாக தகவல். “