மகிழ்ச்சியாக இருப்பது என்பது குடித்து விட்டு கும்மாளம் இடுவது தான் என சித்தரிக்கிறது கேரள சினிமாக்கள் – எழுத்தாளர் ஜெயமோகன்
மகிழ்ச்சியாக இருப்பது என்பது குடித்துவிட்டு கும்மாளம் இடுவது தான் என கேரள சினிமாக்கள் தவறாக சித்தரிப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருக்கிறார்.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களிடன் கருத்து கேட்ட போது, குடிப்பது, ’வாந்து எடுப்பது, வம்பிழுப்பது, சண்டையிடுவது, சாமானியர்களை நிலையகுலையச்செய்வது, கும்மாளவிடுவது, இவைகள் தான் மகிழ்ச்சிக்கான காரணங்கள், இவைகள் தான் நம்மை ஜாலியாக இருக்க செய்யும்’ என கேரள சினிமாக்கள் படத்திற்கு படம் சித்தரிப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக சாடி இருக்கிறார்.
“ படத்திற்கு நான்கு பேர் குறைந்தபட்சம் குடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக கேரள சினிமாக்கள் சித்தரித்துக் கொண்டே வருவதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறி இருப்பது மலையாள சினிமாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது “