‘யானை’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
Arun Vijay Yaanai Tamilnadu Rights Bagged By Biggest Company
அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் ‘யானை’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
ட்ரம்ஸ் ஸ்டிக் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை KKR Cinemas கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ கமெர்சியல் சினிமாவிற்கு பெயர் போன ஹரியின் சினிமாத்தனத்தை திரையில் ரசித்து நாட்களாயிற்று. இந்த திரைப்படம் நிச்சயம் ரசிக்க வைக்கும் நம்புவோம் “