’கிளாமர் நடிகை என்ற பெயர் எனக்கு வேண்டாம்’ – யாஷிகா ஆனந்த்
Yashika Annand Stills
கிளாமர் நடிகை என்ற பெயர் எனக்கு வேண்டாம், அந்த அடையாளத்தை மாற்ற விரும்புகிறேன் என்று நடிகை யாஷிகா தெரிவித்து இருக்கிறார்.
இயக்குநர் வெங்கட்ராமன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் இணைவில் உருவாகி இருக்கும் ‘கடமையை செய்’ திரைப்படம் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், ‘எனக்கு கிளாமர் நடிகை என்ற அடையாளம் வேண்டாம், இந்த படம் அந்த அடையாளத்தை மாற்றும் என நம்புகிறேன்’ என்று யாஷிகா தெரிவித்து இருக்கிறார்.
“ தொடர்ந்து இது போன்ற படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்றும் எஸ் ஜே சூர்யா அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் யாஷிகா கருத்து தெரிவித்து இருக்கிறார் “