திருப்பூரில் 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ பாசிட்டிவ்!
TN Tiruppur 16 School Students Confirmed Corono Positive
திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்திருக்கும் இந்த நிலையில், திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் மூன்றாவது அலை குறித்த பெரிய பயமும் மக்களிடையே நிலவி வருகிறது.
நேற்று தான் மீதமுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை எப்போது துவங்கலாம் என்று தமிழக அரசு அனைத்து துறைகளிடமும் ஆலோசனை செய்து வந்த நிலையில், 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அரசிற்கும் அதிர்ச்சியையே அளிக்கிறது.
“ இதுவரை ஒரு குறிப்பிட்ட வயதினரையே தாக்கி வந்த தொற்று, தற்போது குழந்தைகளையும் மாணவர்களையும் தாக்கி வருவது மூன்றாவது அலை குறித்த பெரும் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது “