தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகள் என யாவற்றையும் கூட்டாக ஒன்றிணைத்து 55 தடுப்பூசி மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி இயங்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இம்மையத்தில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உட்பட, ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரமும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளும் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட்டதாகவும், மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் அளவிற்கு எல்லா வசதிகளையும் கையிருப்பில் வைத்திருப்பதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.பா. சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“ தினமும் கூலி வேலைகளுக்கும், ஐ.டி கம்பெனிகளுக்கும், பலதரப்பட்ட ஓய்வில்லாத வேலைகளுக்கும், வேலைக்கு செல்பவர்கள் நேரமின்மை காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள கஸ்டப்படுகிறார்கள், இத்திட்டம் அவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாகவே இருக்கும் “