52 கோடியை கடந்து விட்டது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை – இந்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் 52 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. ஒன்றிய அரசு அளித்த 54.04 கோடி தடுப்பூசிகளுள் மாநில மற்றும் யூனியன் பிரேதசங்கள் 52.36 கோடி தடுப்பூசிகளை முழுமையாக உபயோகித்து இருப்பதாகவும் 2.5 கோடி தடுப்பூசிகளை மிச்சம் வைத்திருப்பதாகவும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்களுள் முதல் ஐந்து இடங்களை உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா,குஜராத்,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பிடிக்கின்றன. உலக அளவில் அதிகபட்ச தடுப்பூசி செலுத்திய நாடுகளுள், 1.8 பில்லியன் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுடன் சீனா முதலிடத்திலும், 52.36 கோடி தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
52.36 கோடி தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியிருந்த போதும் முழுமையாக இரண்டு தவணைகளையும் எடுத்துக்கொண்டவர்கள் என்று பார்த்தால் ஒட்டு மொத்தமாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுள் ஐந்தில் ஒரு பங்காகவே இருக்கிறது. இரண்டு தவணையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டால் மட்டுமே கொரோனோ என்னும் நுண்கிருமியை 70 சதவிகிதம் எதிர்கொள்ளும் திறன் கிடைக்கும் என்ற கருத்தியல் இருக்கும் போது முதல் தவணையோடே ஒரு சிலர் நிறுத்திக்கொள்கின்றனர். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்ததில் முதல் தவணை எடுத்துக்கொண்டவுடன் வருகின்ற காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற சின்ன சின்ன விளைவுகளுக்காக பயந்து இரண்டாவது தவணையை எடுத்துக்கொள்ளாமல் விடுகின்றனர். சின்ன விளைவுகளுக்காக பயந்து பெரிய விளைவுகளை எதிர் கொள்ளாதீர்கள். விழித்துக்கொள்ளுங்கள். இந்த கொரோனோவிற்கு எதிராக இரண்டு தவணையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து முழுமையாக நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
” இந்த கொரோனோ என்னும் பெருங்கிருமிக்கு எதிராக நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்னும் போது அதை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் தவணையுடன் நிறுத்திக்கொள்ளாமல் இரண்டு தவணையும் எடுத்துக்கொள்ளுங்கள். அது மட்டுமே உங்களை கொரோனோவுக்கு எதிராக போர்புரிய தயார்படுத்தும் “