தமிழகத்தில் 14 நாட்களில் 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று!
தமிழகத்தில் பள்ளிகள் திறந்த நாளான செப்டம்பர் 1 முதல் நேற்றைய தினம் வரை, சுமார் 83 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு செப்டம்பர் 1-இல் இருந்து, 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு தகுந்த கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் பாடத்திட்டங்கள் செயல்படலாம் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்ததிலிருந்து நேற்றைய தினம் வரை 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.
பள்ளிகள் திறந்ததிலிருந்து தொடர்ந்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மாறி மாறி தொற்று உறுதி செய்யப்படுவது தமிழகத்தில் நீடிக்கும் நிலையில், 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கும் ஆலோசனையிலும் அரசு ஈடுபட்டு வருவது தொற்றின் நிலையை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
” மூன்றாவது அலை பெரும்பாலும் 18 வயதிற்கு உட்பட்டவரை தாக்கும் என்று அன்றே மத்திய சுகாதார துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் மாணவர்களிடம் தொற்று உறுதி செய்யப்படுவது, மூன்றாவது அலையை உறுது செய்கிறதோ என்னும் அச்சத்தில் மக்கள் குழம்பி போய் உள்ளனர் “