ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படத்தின் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, விஷால், மிர்நளினி, மம்தா மோகன் தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணையும் ENEMY படத்தை, அரிமா நம்பி, இருமுகன் போன்ற வெற்றிப்படங்களை தந்த ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஜூலை அன்று வெளியான இந்த படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படம் தீபாவளி 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆர்யா-விஷால் இணைந்த அவன் – இவன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. தற்போது ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரையும் மக்களிடையே வெகுவாய் போய் சேர்ந்த நிலையில் எனிமி படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே பெருகத் தொடங்கி உள்ளது. திரையரங்குகள் திறந்த நிலையில் படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு செல்ல படக்குழு முடிவெடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

“ பெரிய திரையில் பெரிய ஹீரோக்களின் பட்டாளத்தின் அதிரடியைக் கண்டு களித்து எவ்வளவோ நாட்கள் ஆயிற்று, பார்க்கலாம், ENEMY நமக்கு திரையரங்குகளில் விருந்தாய் அமைகிறதா இல்லை படையலாய் அமைகிறதா என்று..? “

About Author