இந்திய தண்டனை சட்டம் IPC – SECTION 100 பாலியல் விதி மீறல்களை பற்றி என்ன சொல்கிறது?
ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் இந்தியாவில் ஒரு பாலியல் விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பதிவாகிறது. இதில் பதிவான புகார்கள் மட்டுமே அடங்கும் எனில் பதிவில்லாத புகார்கள் என்பது எத்தனையோ இருக்கும். பயத்தில் புகார்கள் கொடுக்காமல் மறைத்தவர்கள் எத்தனை பேராக இருக்கும் என்பது கணக்கில் இல்லாதது. சிறுமிகள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் பாராமல் இன்றைய காலங்களில் அரங்கேறும் பாலியல் அத்துமீறல்களுக்கு இந்திய சட்டத்தில் எப்போதாவது தான் உயர்ந்த தண்டனை எனப்படும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஒரு பாலினத்தின் மேல் அடிக்கடி உட்படுத்தப்படும் துன்புறுத்துதலுக்கு சட்டத்தில் சொல்லும்படியான தீர்வுகள் இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது!
அது தான் IPC Section 100
ஓரு பெண் பாலியல் விதிமீறல்களுக்கு உட்படுத்தப்பட்டால் என்ன செய்யலாம்? சட்டம் என்ன சொல்கிறது? IPC Section 100-படி அத்துமீறி ஒருவர் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்துதலுக்கு உட்படுத்தினால் தற்காப்பிற்காக அவரை கொல்வதற்கும் அந்த பெண்ணிற்கு உரிமை இருக்கிறது என்பதை அந்த சட்டம் விளக்குகிறது. ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய சட்டம் IPC Section 100. இனிமேல் உங்கள் மீதான துன்புறுத்தல்களை திறனுடன் கையாளுங்கள்.
” அத்து மீறுபவனுக்கு இனி மரணத்தின் பயத்தைக் காட்டுங்கள் பெண் சிங்கங்களே! சட்டம் உங்களோடு இருக்கும் போது கவலை ஏன்? கதறுவதை விட்டு விட்டு தைரியத்தை கையில் எடுத்து உங்களை மீறி உடலைத்தொடுபவனுக்கு மரண பயத்தை காட்டிடுங்கள் “