வெளியானது நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது பட அப்டேட்!
Vijay Sethupathi 50th Film Update Is Out Idamporul
நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் ஐம்பதாவது படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.
குரங்கு பொம்மை திரைப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி என்ற நடராஜ், மம்தா மோகன் தாஸ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாக இருக்கும் விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்திற்கு ‘மஹாராஜா’ என பெயர் சூட்டி இருக்கிறது படக்குழு.
“ படத்தின் ஒவ்வொரு கேஸ்ட்டும் அதிபயங்கரமாக இருப்பதாலும், விஜய் சேதுபதியின் 50 ஆவது படம் என்பதாலும் இப்போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது “