வெளியானது விக்ரம் நடிக்கும் மகான் படத்தின் முன்னோட்டம்
தயாரிப்பாளர் லலித் குமார் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – விக்ரம் – துருவ் விக்ரம் – சிம்ரன் – சிம்ஹா என்ற பெரிய கூட்டணி இணையும் மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் சத்தமில்லாமல் வெளியாகி இணையங்களில் பெரிய சத்தமிட்டு வைரலாகி கொண்டிருக்கிறது.
சந்தோஷ் நாராயணின் அசத்தலான பறை இசையில் தொடங்கும் முன்னோட்டம், தசரா குழுவில் வேஷமிடும் ஒரு குழுவை காண்பித்து, அதற்கு பின்னர் வரும் சீனில் விக்ரம் தனது பைக்கில் ஒரு கருங்காளி வேஷமிட்ட நபரையும் பின்னால் வைத்து ஓட்டி வருவது போல அந்த முன்னோட்டத்தில் காட்டி இருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவரது இயக்கத்தில் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கும். அத்தகைய வித்தியாசங்களை, வித்தியாசமான பல நடிப்புகளை நம் கண்முன் காமித்திருக்கும் நடிகர் விக்ரம் அவர்களிடம் கொண்டு போய் சேர்த்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் எனில் அது நமக்கு ட்ரீட் தானே!
“ திரையரங்குகள் வேறு தொடங்க இருக்கிறது. விசில் சத்தம் நிறைகின்ற அளவுக்கு ஒரு படத்தை எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்துங்கள், கார்த்திக் சுப்புராஜ் “
About Author
Auto Amazon Links: No products found.