நடிகை குஷ்பூ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Actor And Politician Kushboo Hospitalised Idamporul
நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியான குஷ்பூ மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
நடிகை, அரசியல், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி என்ற பன்முகம் கொண்ட குஷ்பூ அவர்கள் குறுக்கெலும்பு பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவைச்சிகிச்சை ஒன்றை முடித்து விட்டு வெகுவிரைவில் வீடு திரும்புவேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
“ ஏற்கனவே ஒரு சில பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குஷ்பூ, மீண்டும் சிறிய அறுவை சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததும் பல்வேறு தரப்பினரும் இணையத்திலேயே விசாரிப்புகள் செய்து வருகின்றனர் “