ஆப்கனில் உள்ள ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் கூடாரங்களை தாக்கிய அமெரிக்க ட்ரோன்கள்!
காபூல் விமான நிலையத்தில் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலியான நிலையில் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஆப்கனில் உள்ள ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் கூடாரங்களின் மீது வான்வழி தாக்குதல்களை பொழிந்தது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் தீவிரவாதம் எங்கு தழைத்தாலும் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும். இது ஐ எஸ் அமைப்பினருக்கு மிகப்பெரிய எச்சரிக்கை தான். இதற்கு பின்னும் எதும் தாக்குதலில் ஈடுபட்டால் அதன் விளைவு இதை விட மிக்ப்பெரியதாக இருக்கும் என்று கடுமையாக பயங்கரவாத அமைப்புகளை எச்சரித்து உள்ளார். பயங்கரவாதங்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவோம் என்று இந்தியாவும், ஆப்கனில் நடந்த தாக்குதல் குறித்து அறிக்கை விடுத்துள்ளது.
“ பயங்கரவாதம், தீவிரவாதம் இந்த கொள்கைகளின் மூல எதையும் அடைந்து விடலாம் என்பது என்றும் தீர்வாகாது என்பதை பயங்கரவாதிகள் உணரும் வகையில், தீவிரவாதத்திற்கு எதிராக ஜோ பைடன் போன்றவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து தொடர வேண்டும் என்பதே சமூகத்தில் சமநிலைத்தன்மையை விரும்புவர்களின் கருத்தாக இருக்கிறது “