சிறுபான்மை இனத்தவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் தலிபான்கள்!
அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முண்டாரக்ட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய போது ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினர் 9 பேரை படுகொலை செய்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
கடந்த 2001-இல் அல்கொய்தா அமைப்பு இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்காவில் நிகழ்த்தி இருந்திருந்தது. அன்றைய தலிபான்கள் அதை ஆதரித்தும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தும் வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா தலிபான்கள் மீது படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அன்றிலுருந்து இன்று வரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கி தலிபான்களுக்கு எதிராக போர்புரிந்து வந்த நிலையில் தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியிருக்கும் சூழல் ஆப்கனின் நிலையை மிகவும் மோசமாக்கி இருக்கிறது.
அதிபர் ஆட்சியை ஆதரித்தவர்களுக்கும் சிறுபான்மையினர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருவதாகவும் அது வெளியில் தெரிவதில்லை என்றும் அங்கு பாதிப்புக்குள்ளானவர்கள் ஒரு சிலர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஷியா பிரிவைச்சேர்ந்த முண்டாரக்ட் மாகாணத்தை சேர்ந்த 9 பேர் தலிபான்களால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் அளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் இணையங்களில் அறிவித்து வருகின்றன.
”உடைமைகள் இல்லை, உடனிருந்தோர் இல்லை இருக்க இடமிருந்தாலும் எப்போது உயிர் போகும் என்னும் பயத்தோடு வாழும் நிலைமையில் ஆப்கானிய மக்கள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் சொந்த நாட்டை விட்டு கிளம்ப மனமில்லாது இன்னமும் அங்கேயே தங்கி இருக்கும் ஒரு சில மக்களுக்கு நீதியை தர இயலவில்லயெனினும் நிம்மதியையாவது தருமா தலிபான்கள் ஆட்சி”